இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் இந்தியன். இந்த படம் அக்காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் தொடர்ச்சியை இயக்குனர் சங்கர் அவர்கள் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. எனினும் திரைக்கு வந்த சில தினங்களிலேயே எதிர்பார்த்த அளவு இப்படம் இல்லை என மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்த படமும் இவ்வளவு மோசமான தோல்வியை அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் படத்தில் சேனாதிபதியாக கமலஹாசன் அவர்கள் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியன் 3 திரைப்படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், இந்தியன் 3 திரைப்படத்திற்கு கமலஹாசன் இன்னும் டப்பிங் பேச வரவில்லை என்றும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தினை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடும் என்றால் அவர் டப்பிங் பேச வர மாட்டார் என்றும், திரையரங்கில் ரிலீஸ் செய்வது என்றால் மட்டுமே அவர் டப்பிங் பேச வருவார் என்றும் தகவல் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.