குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.

0
173

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ளது

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா வுக்கு அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் வரும் ஒன்பதாம் தேதி புறப்படும் அவர் தன் சுற்றுப்பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசித் தகர்த்தது.

இதை தொடர்ந்து இந்தியா வழியாக வரும் அனைத்து விமானங்களும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் முழுமையாக தடை விதித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
வருவாய் இழப்பு ஏற்பட்டதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் அனைத்து விமான போக்குவரத்திற்கும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தலாம் என்று தடையை நீக்கியது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை காரணம் காட்டி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்த முழுமையாக தடை விதித்தது பாகிஸ்தான் அரசு.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதலுடன் வெளியுறவு துறை அமைச்சர் ஷா நகமுது குரேஷி நேற்று வெளியிட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்