Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாஜக தலைமையிலான மத்திய அரசால் நீக்கபட்டது. இந்த நீக்கத்திற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது, பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியாகி விட்டனர்.

இந்நிலையில் இன்று பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்று பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டது, ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் ஆயுதங்களுடன் கூடிய இந்த லாரி பிடிபட்டது. மேலும் இந்த லாரியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.இவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய இராணுவ தளபதியிடம் மத்திய அமைச்சர் ஜிசேந்தர் சிங் இந்தியா விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு இந்தியாவுடன் இணைக்கும் என்று தெரிவித்தது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இந்திய இராணுவ தளபதி அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் இராணுவம் உறுதுணையாக இருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க அரசு உத்தரவிடும் நேரத்தில் இந்திய இராணுவம் களத்தில் இறங்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதியின் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்த இருக்கும் பேரணிக்கு எச்சரிக்கை கொடுப்பது போல பார்க்கப்படுகிறது.மேலும் இது மட்டுமின்றி, இராணுவ தளபதியின் இந்த அதிரடி அறிவிப்பு பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய அரசு உறுதியாக இருப்பதை குறிப்பிடுவதாகவும் அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ விரைவில் அடுத்த அதிரடி பாகிஸ்தானியர்களுக்கு காத்திருக்கிறது போல!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version