33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!!

0
143

33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் சம்பளம் ரூ.33.81 கோடியை தாய்நாட்டிற்காக இந்திய ராணுவ வீரர்கள் வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலை சமாளிக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இது இன்னும் 20 நாட்களுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தரப்பில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தினமும் கிடைக்கும் வகையில் உத்தரவு கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உலகளவில் பலாயிரம் பேர் இறந்துள்ளனர். தற்போது மக்களிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அவரவர் குடும்பத்தோடு வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய நாட்டுக்காகவே தங்கள் அர்ப்பணித்து வாழும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூபாய் 33,81,00,000 கோடியை மக்களுக்காக அளித்துள்ளனர். வீட்டை மறந்து நாட்டை பாதுகாக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் இந்தியர்களால் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களே. நாட்டின் ஆபத்தான சூழலிலும் இந்திய ராணுவத்தினர் செய்த உதவி அவர்களின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது.