ஓய்வு பெற்றார் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே! இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

0
124

இந்திய ராணுவத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது.

அந்த பதவிக்கு முதன்முதலாக நியமனம் செய்யப்பட்டவர் பிபின் ராவத் இவருடைய பணி என்னவென்றால், தரைப்படை, கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட மூன்று படைகளையும் ஒன்றிணைத்து தன்னுடைய தலைமையின் கீழ் வழிநடத்துவது தான்.

ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அப்போது இராணுவத் தளபதியாக இருந்த மனோஜ் முகுந்து நரவனே அவர்கள் முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் 29-வது ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.

இவர் நேற்று முன்தினம் முறைப்படி இந்திய ராணுவ தளபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், டெல்லியில் சவுத் பிளாக் புல்வெளியில் நேற்று இவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகளாவிய அரசியல் நிலைமை அதிரடியாக மாறி வருகிற.து இதன் விளைவாக நமக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

தற்போதைய சமகால மற்றும் எதிர்கால சவால்களை முழுமையான அளவில் எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தின் மிக உயர்ந்த செயல்பாட்டு தயார்நிலை உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்காக அதிகபட்ச முன்னுரிமை வழங்குவேன் என உறுதியளித்திருக்கிறார்.

அதோடு இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படையுடன் இந்திய ராணுவம் ஒன்றினைந்து நாடு எதிர்கொள்ளும் அனைத்து பாதுகாப்பு சவால்களையும் வலுவாக கையாளும். வெளிநாட்டு மதமாற்ற மற்றும் சுய சார்பு மூலமாக திறன் மேம்பாடு, நவீனமயமாக்கம் உள்ளிட்டவற்றினடிப்படையில் புதிய தொழில்நுட்ப முறையில் பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.