Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!!

Indian cinema is full of patriarchy!! Famous Actress Review!!

Indian cinema is full of patriarchy!! Famous Actress Review!!

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது!! பிரபல நடிகை விமர்சனம்!!
இந்திய சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது என்று பிரபல நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும் திறமைகளை நிரூபிக்க குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பேரி பெதாவுலா என்ற நேபாள திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சவுடகர் என்ற ஹிந்தி படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 1995ம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், அறிமுகமான நடிகை மனிஷா கொய்ராலா இந்தியன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், முதல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம்.  இதன் பிறகு இவர் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கு மத்தியில் இந்திய சினிமாவை இவர் விமர்சித்துள்ளார்.
நடிகை மனிஷா கொய்ராலா அவர்கள் இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது என்றும், ஆண்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார். மேலும் பல திறமை வாய்ந்த நபர்களுக்கு, நடிப்பதற்கு குறைவான வாய்ப்புகளே கொடுக்கப்படுகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா அவர்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
Exit mobile version