Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓபன் ஹெய்மர் திரைப்படத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு!!

ஓபன் ஹெய்மர் திரைப்படத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு!!
இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ஓபன் ஹெய்மர் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் முதன் முதலாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
ஓபன் ஹெய்மர் திரைப்படம் அணுகுண்டுவின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓபன் ஹெய்மர் அவர்களின் வாழ்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு இந்தியாவில் தற்பொழுது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது.
ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளது. அந்த நெருக்கமாக உள்ள காட்சிகளில் பகவத் கீதையில் இடம்பெற்ற ‘உலகத்தை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதனால் ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் பகவத் கீதை வசனம் வைப்பதா சென்சார் போர்ட் ஏன் இதை நீக்க வில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஒரு காட்சியால் ஓபன் ஹெய்மர் திரைப்படத்தை இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் கிளம்பி வருகின்றது. இதனால் ஓபன் ஹெய்மர் திரைப்படத்தில் இடம் பெற்ற பகவத் கீதை வசனத்தை நீக்குவது தொடர்பாக சென்சார் போர்ட் அதிகாரிகள் ஆலௌசனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Exit mobile version