இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

0
215

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

 

அரசி ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசியின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

உக்ரைன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உலகளவில் உள்ள விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சில தினங்களாக கோதுமையின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

இந்தியாவில் வானிலை காரணமாக அரிசி உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்த சூழலில் பாசுமதி வகை அரிசியை தவிற மற்ற வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்ககம் இந்த தடைக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் சில மாதங்களாக சீரற்ற பருவகால மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. இதனால் அரிசி உற்பத்தியானது இந்தியாவில் குறைந்து விட்டது. குறைவான அரிசி உற்பத்தியை கருத்தில் கொண்டும், உயர்ந்து வரும் விலை வாசியால் உள்நாட்டில் அரிசி தடையின்றி கிடைக்கவும், இந்தியாவில் அரிசி ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா விதித்துள்ள அரிசி ஏற்றுமதிக்கான தடையானது உலக அளவில் அரிசியின் விலையை உயர்த்தும் எனவும் இதனால் அரிசி வியாபாரிகள் பலமடங்கு லாபம் அடைவர் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவர் “ஏற்றுமதிக்கான சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கப் போகின்றது. ஒரு மெட்ரிக் டன் அரிசிக்கு குறைந்த பட்சம் 50 டாலர்(இந்திய மதிப்பில் 4100 ரூபாய்) கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும் அந்த லாபம் 100 டாலர்(இந்திய மதிப்பில் 8000 ரூபாய்) அல்லது அதற்கு மேல் அதிகமாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சந்தை விலை எவ்வளவு உயரும் என்பதை பார்க்க விற்பனையாளர்களும் நுகர்வோர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.