Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவை எச்சரித்த இந்திய அமைச்சர்! லடாக்கில் நீடிக்கும் பதற்றம்!

இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு உரிமை இல்லை என்று கடும் எச்சரிக்கை விடுத்தார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்தியாவின் அண்டை நாடுகள் உள்நாட்டு இறையாண்மையில் தலையிடக் கூடாது என்றும் தலைமை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

லடாக் எல்லையில் சீனா தனது படை வீரர்களை குவித்ததால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நீடித்து வருகிறது. இந்தியா மற்றும் சீனா இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியபோது, சீனா தனது  வீரர்களை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாகவும், ஆனால் அவற்றை செயல்படுத்த வில்லை என்பதையும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க இயலாது என்றும் அவற்றைப் பற்றி என்ன நடக்கும் என்று என்னால் யூகிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புளூம்பர்க் பொருளாதார கூட்டத்தில் மேற்கூறியவற்றையெல்லாம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்திய எல்லையில் இருக்கக்கூடிய ஜம்மு காஷ்மீர் மட்டுமே ஒருங்கிணைந்த பகுதியாகும்.  ஆனால் லடாக் என்பது இந்தியாவின் உரிமையாகும். இந்த லடாக் எல்லையில் சீனாவிற்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தலைமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version