Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் ராஜபக்ச சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து கடுமையான போராட்டங்களில் குதித்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்படுகின்றனர். அதோடு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிகக்கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது, அவர் திரிகோணமலையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில், நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையெழுப்பிவந்தனர்.

ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காததால் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது.

இந்த போராட்டத்தின் தீவிரத்தால் இலங்கை பிரதமர் பதவியை வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், ஆனால் அவர் குடும்பத்துடன் திடீர்னு தலைமறைவானார்.

இதனை சற்றும் எதிர்பாராத இலங்கை மக்கள் அவருடைய வீட்டிற்கு தீ வைத்து எரித்தனர். இதற்கு நடுவே இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி அடிப்படை ஆதாரமில்லாதது இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் தன்னுடைய மறுப்பை தெரிவித்திருக்கிறது.

Exit mobile version