Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது.

நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டடுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதவாது,நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இந்த நிகழ்விற்கு விருந்தினராக இந்திய துணைத் தூதரக ரந்தீர் ஜெய்ஸ்வால் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகின்ற ஆகஸ்ட் 14ம்
தேதி எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில்,இந்திய தேசிய கொடியின் மூன்று வர்ணங்களால் ஒளிரூட்டப்படும் நிகழ்வு நடத்தப்படுவதாக திட்டமிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் விழா, இந்திய-அமெரிக்க இடையே,வளர்ந்து வரும் சமூகத்தின் தேசபக்திக்கு ஒரு சான்றாக விளங்கும்.மேலும் அதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் எஃப்ஐஏவுக்கு இது ஒரு பொருத்தமான நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.

Exit mobile version