Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அமைப்பின் வித்தியாச கோரிக்கை! காதலர் தினத்தில் மகிழ்ச்சி பெருக இதை அணைத்துக் கொள்ளுங்கள்! 

இந்திய அமைப்பின் வித்தியாச கோரிக்கை! காதலர் தினத்தில் மகிழ்ச்சி பெருக இதை அணைத்துக் கொள்ளுங்கள்! 

காதலர் தினத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க ஒரு வித்தியாசமான கோரிக்கையை இந்திய அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினமாக பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோளை விடுத்து உள்ளது. அதில், இந்த தினத்தில் நீங்கள் பசுக்களை அணைத்து கொண்டாடுங்கள். அப்படி நாம் செய்யும்போது, உணர்வுரீதியாக வளமும் மற்றும் கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்க பெறும்.

இந்திய கலாசாரம் மற்றும் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எப்போதும் இருப்பது பசு என நாம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய வாழ்வை நீடித்திருக்க செய்கிறது.  பசுக்கள் கால்நடை வளம் மற்றும் பல்லுயிர்மம் ஆகியவற்றையும்  பிரதிபலிக்கின்றது.

அன்னையைப் போல் நமக்கு பாலூட்டி வளர்த்தெடுக்கும் இயற்கையான  குணங்களால்  நாம் அதனை காமதேனு என்றும் கோமாதா என்றும் அழைத்து வருகிறோம். மனித இனத்திற்கு எண்ணற்ற வளங்களை அது வழங்குகிறது. என விலங்குகள் நல வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வளர்ந்து வரும் மேற்கத்திய கலாசார வளர்ச்சியால்,  நமது வேதகால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அதனால் நாம் பசுவை பாதுகாப்பது அதனை அழியாமல் பாதுகாக்க உதவும் என்றும் தெரிவித்து உள்ளது. எனவே வாழ்வை மகிழ்ச்சியாக்க மற்றும் நல்ல ஆற்றல் முழுவதும் கிடைக்க நமது இன்னொரு தாயான பசுவின் முக்கியத்துவங்களை மனதில் கொண்டு, பிப்ரவரி 14-ந்தேதியை பசுக்களை விரும்புவோர் அனைவரும் பசுவை அணைக்கும் நாளாக கொண்டாடலாம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Exit mobile version