Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின், சிகாகாவில் உள்ள, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ருத்ஜார்ஜ் 19 வயதான இவரது பெற்றோர் தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத்தை சேர்ந்தவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் குடியேறினர். இந்நிலையில், இலினாய்ஸ் பல்கலைக்கழக  விடுதியில் ரூத் ஜார்ஜ் தங்கி, படித்து வந்தார். கடந்த வெள்ளிகிழமை முதல், ரூத் ஜார்ஜ்ஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என, பல்கலைக்கழக  போலீசாரிடம், அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜின் மொபைல் போன் பல்கலைகழக கார் நிறுத்தும் இடத்தை காட்டியது. அங்கு சென்று பார்த்தபோது ரூத் ஜார்ஜ் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுத்து நெரித்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமெராவை ஆராய்ந்தனர்.

அப்போது ரூத் கார் நிறுத்துமிடத் திற்கு வந்ததும், அவரை பின்தொடர்ந்து ஒரு இளைஞர் சென்றதும், தெரியவந்தது. அந்த இளைஞரை பழைய இடங்களில் தேடி வந்தனர், இறுதியாக அந்த இளைஞரை சிகாகோ மெட்ரோ, ரயில் நிலையத்தில், கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பெயர் டொனால்ட் துர்மன், என்றும், பல்கலைக்கழகத்திற்கும் அவருக்கும், எந்த வித தொடர்பும் இல்லை என்றும், போலீசார் தெரிவித்தனர்.

இந்திய வம்சாவளி மாணவி, பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version