Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி அந்த நாட்டின் நரா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை வந்தவர் இவர் என்பதால் இவருடைய இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு ஜப்பானிய அரசு தீர்மானம் செய்தது.

இதனடிப்படையில் இன்றைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது இந்த இறுதிச் சடங்கு பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு சென்றடைந்தார்.

இதனையடுத்து ஜப்பான் நாட்டின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். 2 நாட்டுத் தலைவர்களும் ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது. அதோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய பல விஷயங்களை விவாதித்துள்ளார்கள்.

Exit mobile version