இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

0
350
Indian Railways announced! Special train service to these areas!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு  கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும்.

அதனையடுத்து மார்ச் நான்காம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி என இரு தேதிகளிலும் 12.45 மணிக்கு மீண்டும் அமர்தசரஸிலிருந்து கோராக்பூருக்கு புறப்படும். மேலும் கோரக்பூரில் இருந்து மும்பைக்கு கோரக்பூர் பாந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். இந்த ரயில் மார்ச் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.10 மணிக்கு கோராக்பூரில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு செல்லும்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் கோராக்பூருக்கு செல்லும். கோராக்பூர் கேரளா செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்லானது வரும் மார்ச் 4 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணிக்கு கேரளாவில் இருந்து கோராக்பூருக்கு செல்லும். மறுமார்க்கமாக வரும் மார்ச் 6 ஆமா தேதி மற்றும் 11 ஆம் தேதிகளில் காலை 11.55 மணிக்கு மீண்டும் கேரளத்திற்கு திரும்பும்.

குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் சுரத் கர்மாலி எக்ஸ்பிரஸ் ரயிலானது வரும் மார்ச் 7 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு கர்மாலியை சென்றடையும். மறுமார்க்கமாக மார்ச் 8 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு சூரத் சென்றடையும்.