பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

0
173

பார்வை இல்லாமல் பயணம் ; பரவசமூட்டும் 9 வயது சிறுவனின் சாதனை..?

கண் பார்வை இல்லாமல் சிறிது தூரம் நடப்பதே சவால்தான் ஆனால், தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு சிறுவன்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிவ். சிறுவயதில் இருந்தே கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சொந்த ஊரிலேயே கண்களை மூடிக்கொண்டு பல கிலோமீட்டர் சைக்கிளில் வலம் வந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நகரம் மற்றும் முக்கிய புறச்சாலைகளின் வழியாக பேராவூரணி சாலையில் சைக்கிள் பயணத்தை தொடர்ந்து 35 கிலோமீட்டர் தொலைவை கடந்து திருச்சிற்றம்பலத்தில் முடித்தார்.

முதலில் 20 கிலோமீட்டர் மட்டுமே இலக்காக இருந்த நிலையில், மாணவன் 35 கிலோமீட்டர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளை ஓட்டி சாதனை படைத்த நிகழ்ச்சி பொது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. சிறுவனின் சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்ததுள்ளது. சாதனை சிறுவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வருகிறது.