இந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

0
133

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் கூட இந்த சட்டம் தேவைப்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது. தேசத்துரோக சட்டம் 124 பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆகவே தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல கேள்விகளை முன் வைத்திருக்கிறது. அதாவது மகாத்மா காந்தி உட்பட பல விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக சட்டம் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட தேவைப்படுகிறதா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.

அதோடு தேசத்துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது மரத்தை அறுக்க ஆரம்பத்தை தச்சர் இடம் கொடுத்தால் ஒட்டுமொத்த காட்டை அழிப்பது போல இருக்கிறது எனவும் இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கருத்து ஒன்றையும் தெரிவித்திருக்கிறது.