தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!
ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக உலவி வருவதாக தகவல்கள் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில், ஹபீஸ் சயித் வீடு அமைந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
இந்த இல்லத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் மெக்கானிக் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ரா என்ற நிறுவனம் தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது பாகிஸ்தானில் கடந்த 23 ஆண்டுகளாக நடைபெற்ற அணைத்து தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவர், ஒரு இந்தியர் என்பதும், இந்தியாவின் உளவு அமைப்பான ராவுடன் அவர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது, எனவும் கூறியிருக்கிறார்.
இந்த ஒட்டுமொத்த தாக்குதலும் இந்திய ஆதரவுடன் தான் நடைபெற்றது என்பதை எந்த சந்தேகமும் இன்றி கூறமுடியும் என்றும், எங்கு வேண்டுமானாலும் கூறமுடியும், என்றும் கூறினார். ஆனால் இது தொடர்பாக அவருக்கு எத்தகைய உளவுத் தகவல்கள் கிடைத்தது என்பன போன்ற எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்றும்ன் கூறினர்.