Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்றைய வணிக நேர தொடக்கத்திலேயே 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவில் கொரனோ தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .இன்றைய வணிக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது.

முற்பகல் 10 மணியளவில், மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து, 58 ஆயிரத்து 487 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி 182 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 435 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், பங்கு விலை மற்றும் உலோகத் தொழில் நிறுவனங்கள் ஐந்தரை விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Exit mobile version