கனடா அரசால் சர்வதேச மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம் தான் “student direct scheme”. இதன் மூலம் விசாவிற்காக மாணவர்கள் பல மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலையில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டுமின்றி, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் இருந்து கல்வி பயில்வதற்காக இங்கு ஒரு மாணவர்களுக்கு வீடு பிரச்சனை, சுகாதார பிரச்சனை, கல்வி நிறுவனங்களில் சேர்வது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கன்னட அரசு கூறியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகவே இதற்கு தடை விதித்ததாகவும் கனடா தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து சர்வதேச மாணவர்களை கட்டுப்படுத்த அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்த மாணவர் விசா திட்டத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் விசாவிற்காக மீண்டும் பல மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
கனடா அரசினுடைய இந்த முடிவு சூழ்நிலை சீர்கேட்டை சரி செய்வதற்காக என்ற கேள்வி அனைவரின் உடைய மனதிலும் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியா கனடா விடையே விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி இந்தியர்களை இன்னும் விளக்கி வைப்பதற்கான காரணமாக இது உள்ளது என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.