Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகும் இந்திய பெண்!

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளிப் பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து மீண்டும் பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்கிறார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்ட தொழிலாளர் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெரேபி கார்பைன் அவர்களுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது

இதனை அடுத்து அவர் கட்சி தலைவரின் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. மேலும் தொழிலாளர் கட்சியை இன்னொரு தேர்தலுக்கு கொண்டு செல்ல தான் தயாராக இல்லை என்றும் ஜெரேபி கார்பைன் அவர்களே கூறியுள்ளார்.

இந்த நிலையில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிசா நண்டி என்ற பெண் வேட்பாளரும் உள்ளார். இவர் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள விகான் என்ற தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை இந்தியர் என்பதும் தாயார் ஆங்கிலேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் கட்சியின் தலைவராக லிசா நண்டி தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்தான் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் வர வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version