சமூக வலைதள அடிமைகளாக மாறிப்போன இந்தியர்கள்!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!!
நாம் இருக்கும் இடத்தில் இருந்து உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை அறியும் இன்றைய அளவிற்கு டெக்னலாஜி வளர்ந்து விட்டது. நவீன கால உலகை மொபைல் என்ற எலக்ட்ரானிக் பொருள் நம் உள்ளங்கையில் அடக்கி விட்டது.
நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சோசியல் மீடியா செயலிகளான எக்ஸ்,மெட்டா, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நம் கருத்தை பகிரவும், மற்றவர்கள் கருத்தை தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதயவியாக இருக்கிறது.
கருத்து தெரிவிக்க, அரசியல், சமையல், கல்வி, அரசு திட்டங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள சமூக வலைத்தளங்கள் பெரிதும் உத்தியாக இருக்கிறது. இப்படி பல நன்மைகள் சோசியல் மீடியாவிடம் இருந்தாலும் நாம் பயன்படுத்துவதை பொறுத்து தான் அவை நமக்கு சாதகமா? பாதகமாக மாறும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை என்பது போல் சோசியல் மீடியாவை யூஸ் பண்ணுவதை அளவாக வைத்துக் கொண்டால் நமக்கு பிரச்சனை இல்லை. சமூக வலைத்தளங்களை குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் பயன்படுத்தினால் நல்லது. அதை விடுத்து சோசியல் மீடியாவே கதி என்று கிடந்தோம் என்றால் அது நமக்கு பெரிய ஆபத்தாக மாறிவிடும்.
போனை கையில் எடுத்தால் நேரம் போவது கூட தெரியமால் மணிக்கணக்காக அதையே பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். சிலர் சாப்பிட, தூங்க கூட மறைந்து சோசியல் மீடியாவில் மூழ்கி விடுகின்றனர். இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
உலகில் அதிக நேரம் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதில் இந்தியர்கள் தான் நம்பர் 01 இடத்தில் இருப்பது நம் இந்தியர்கள் தான். அதிலும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதால் 6 இந்தியர்களில் ஒருவர் ஒரு நாளில் 1 1/2 மணி நேரத்தை வீணடிக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
நம் இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமானோர் ஷார்ட் வீடியோக்களை பார்க்க 1 1/2 மணி நேரத்தை செலவிடுகின்றனர். ஷார்ட் வீடியோக்களை அதிகம் பார்க்க காரணம் அதில் அவர் அவர் தாய் மொழிகளில், உள்ளூர் கன்டென்ட்கள் அதிகம் இருப்பதினாலும், வீடியோ குறுகிய நேர்தத்தில் இருப்பதாலும் விரும்பி பார்க்கின்றனர் என்பது ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ளது.
நல்ல விஷயங்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் நம் நல்ல எண்ணங்களை சிதறடிக்கும் தகவல்கள், வீடியோக்களை பார்ப்பது தான் தவறு. நாம் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதால் மன அழுத்தம், மன உளைச்சல், தனிமை, மாரடைப்பு, தூக்கமின்மை, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. அதுமட்டும் இவை நம் எதிர்காலம் பெரிதளவில் பாதிக்க கூடும். எனவே சோசியல் மீடியாவை அளவோடு பயன்படுத்துவது அனைவரும் நல்லது.