Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

#image_title

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!

உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜய் பங்கா அவர்கள் இன்று உலக வங்கியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

63 வயது ஆகும் உலக வங்கியின் புதிய தலைவர் அஜய் பங்கா அவர்கள் புனேவில் பிறந்தவர். உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா அவர்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம், ஐஐம் அகமதாபாத் ஆகிய கல்லூரிகளில் பொருளாதாரம் பயின்றுள்ளார்.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அஜய் பங்கா அவர்கள் பெப்சிகோ, சிட்டி க்ரூப், ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு ஒரே வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டு அஜய் பங்கா அவர்கள் இன்று உலக வங்கியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அஜய் பங்கா அவர்கள் ஜூன் 2ம் தேதி உலக வங்கியின் தலைவராக பதவியேற்று ஜூன் 5ம் தேதி முதல் உலக வங்கியின் தலைவராக பணியாற்றவுள்ளார்.

Exit mobile version