Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!

உத்திரபிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல அடுத்த மாதம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. ஆளும் பாஜகவிற்கு முக்கிய எதிர்க்கட்சியான, சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நமது உண்மையான எதிரி சீனா, பாகிஸ்தான் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக வாக்கு வங்கி அரசியலுக்காக பாகிஸ்தானை மட்டுமே குறி வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் பாகிஸ்தான் ஆதரவாளர் என பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், ஜெனரல் பிபின் ராவத் கூறுவதையே பாகிஸ்தான் விஷயத்திலும் நான் கூறினேன். சீனா நமது மிகப்பெரிய எதிரி என்று அவர் கூறியிருந்தார். நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியிலேயே அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளதை மறுக்க முடியாது என்று ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்திருந்தார். பிபின் ராவத்தை மேற்கோள் காட்டாமல் இருக்க முடியுமா? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Exit mobile version