Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம்

lucknow

lucknow

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்காக என தனியாக ஒரு பாடத்திட்டத்தை லக்னோ பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைகழகத்தில், ‘கர்ப் சன்ஸ்கர்’ என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அப்பாடத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் உடுத்த வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு, தாய் சேய் நலனில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இசை உள்ளிட்ட தாய்மை பற்றிய பாடங்கள் கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பாடத்தினை ஆண் மாணவர்களும் தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் : மாநில கவர்னரான ஆனந்திபென் படேல், தாய்மார்களாகும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதால், பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தின் இந்த நடவடிக்கையை மாணவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். பல்கலைகழகத்தை சேர்ந்த ஆண் மாணவர் கூறுகையில், இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மிகுந்த நன்மை அளிக்கும் பாடத்திட்டமாக உள்ளது.குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் மேம்பட்ட சமூகத்தை உருவாக்கவும் இதுபோன்ற பாடத்திட்டம் அவசியம் தேவை எனவும் கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version