Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் முதன்முறையாக நீர்வழி விமான பயணம் – பிரதமர் துவக்கி வைத்தார்!

இந்தியாவில் முதன்முதலில் நீர்வழி விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது. அதாவது நீர்ப்பரப்பில் இருந்து துவங்கி, நீர்ப்பரப்பிலே இறங்கும் இந்தவிதமான விமானங்கள் நீர்வழி விமானங்கள் என்றும் கடல் விமானங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நீர்வழி விமானங்கள் இந்தியாவில் தற்போது தான் முதல் தடவை இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அத்துடன் சபர்மதி என்ற இடத்திலிருந்து நர்மதை என்ற இடம் வரை அவர் இந்த விமானத்தில் பயணித்தார்.

நீர்ப்பரப்பில் இருந்து புறப்பட்டு நீர் பரப்பில் இரங்கக் கூடிய தன்மை பெற்ற இத்தகைய விமானம் முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த விமானத்தில் பயணித்த பிறகு, இது சுற்றுலா தொழில் வளர உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமானத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி உடான் சட்டத்தின் கீழ் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்களிடம் கட்டணமாக  ரூபாய் 1500 வசூலிக்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்வழி விமானசேவை அகமதாபாத்தில் இருக்கும் சபர்மதி ஆற்றிலிருந்து புறப்படுமாம். கவடியா பகுதியில் இருக்கும் ஒற்றுமை சிலைக்கு செல்வதற்கு நர்மதை ஆற்றில் இறங்கும். இந்த விமான சேவை, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version