இந்தியாவின் உயரிய விருது பெயர் மாற்றம்!! பிரதமர் மோடி அறிவிப்பு!! எதிர்க்கும் எதிர்க்கட்சி!!
இந்தியாவின் மிகவும் உயரிய சிவில் விருது பாரதரத்னா விருது ஆகும் மனித முயற்சியின் எந்த ஒரு துறையிலும் மிக உயர்ந்த ஒழுங்கில் விதிவிலக்கான செயல் திறனை அதிகரிப்பதற்காக இது வழங்கப்படுகிறது இந்த விருது பத்ம விருதுகளில் இருந்து வேறுபட்ட நிலையில் நடத்தப்படுகிறது பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரைகள் பிரதமரால் இந்திய ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கோல் ரத்னா என்ற பெயரில் இதுவரை விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இனிவரும் காலங்களில் இந்த விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் அவர்களின் பெயரில் கோல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து மோடி அவர்கள் கூறியதாவது: விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தாயான்சந்த் அவர்களின் பெயரில் வழங்கப்படும். இந்த மாற்றம் நாடு முழுவதும் பல விளையாட்டு ஜாம்பவான்கள் மற்றும் முக்கிய தலைவர்களிடமும் பல கோரிக்கைகள் வைத்த பின்னர் இந்த ராஜீவ்காந்தி கோல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முன்னாள் தலைவர் பெயரை கொண்ட விருதின் பெயரை மாற்றுவது வரலாற்றை அழிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீட்டில் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க நினைத்தாள் அது நடக்காது என்றார்.