Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவில் பழங்குடி சிறுபான்மையினர் போராட்டம்

சீனாவின் வடக்கு பகுதியில் மங்கோலிய பழங்குடி பிரிவினர் வசிக்கும் இன்னர் மங்கோலியா எனப்படும் உட்பகுதியானது சுயாட்சி பகுதியாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், சீனாவின் வடபகுதியில் மாண்டரின் மொழி கல்வியை புகுத்த அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. இதற்காக வகுக்கப்பட்ட 3 ஆண்டு திட்டத்தின் கீழ், உள்ளூர் வரலாறு, இலக்கியம் மற்றும் பழங்குடி பாடபுத்தகங்களை நீக்கி விட்டு அவற்றுக்கு பதிலாக மாண்டரின் மொழியை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
இது கலாசார அழிப்பு நடவடிக்கை என மங்கோலிய பழங்குடி சிறுபான்மையினர் ஆத்திரமடைந்து உள்ளனர். இந்த புதிய கொள்கைக்கு மறுப்பு தெரிவித்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர்.  கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னர் மங்கோலியா பகுதியில் தெருக்களில் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
Exit mobile version