Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி! நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி சங்கவியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சந்தித்து பாராட்டி இருக்கின்றார்.

சென்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது இந்த நீட் தேர்வில் கோயமுத்தூர் மாவட்டத்தில் முதல் தலைமுறையாக  மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்..

கோயமுத்தூர் மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சார்ந்தவர் சங்கவி இவருடைய தந்தை முனியப்பன் உயிரிழந்துவிட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடு உடன் இருக்கின்றார்.

குடும்ப வறுமைக்கு இடையிலும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்த சங்கவி கடந்த 2018ம் வருடத்தில் நீட் தேர்வை எழுதினார், அதில் தோல்வியை சந்தித்தாலும், கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும், தற்சமயம் நடைபெற்ற நீட் தேர்வில் 720க்கு 202 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

இதனையடுத்து மாணவி சங்கவிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி சங்கவியை நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார் அதோடு மாணவிக்கு மடிக்கணினியை பரிசாகவும் வழங்கியிருக்கிறார்.

இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி இந்த பகுதிக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தேன் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மற்ற பழங்குடியின மாணவர்களுக்கு சங்கவி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் இது மகிழ்ச்சி தருகின்றது என கூறியிருக்கிறார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மனைவியை சந்தித்து மடிக்கணினி வழங்கி இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த பகுதியில் மின்சார வசதி, தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது பழங்குடியின மாணவர்களுக்கு எளிதாக சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவிக்கு தேவையான உதவிகளை அந்தந்த துறை சார்பாக செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

அதேபோல விஜய் ரசிகர்கள் அந்த மாணவி சங்கவிக்கு 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார்கள். அதோடு மனைவிக்கு ஒரு வருடத்திற்கான ரீசார்ஜையும் அவர்கள் செய்து கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Exit mobile version