Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திரனுக்கான குகை கோவில்!

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்து வாழ்மலை இந்த மலைக்கு பின்புறமாக இருக்கின்ற மயிலாடி பெருமாள்புரத்திலிருக்கும் குன்று தேவேந்திரன் பொத்தை என்றழைக்கப்படுகிறது. இந்த குன்றில் தான் தேவர்களின் தலைவனாக விளங்கிவரும் இந்திரனின் குகை கோவிலிருக்கிறது.

ஆள் நடமாட்டமே இல்லாத சுற்றிலும் மரங்களும், செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோவில். இங்கே இயற்கையான முறையில் எந்த வறட்சியிலும் வற்றாத அளவிற்கு நீரூற்று கணை ஒன்று அமைந்திருக்கிறது.

குறுகலான படிக்கட்டுகளில் பிடிமான கம்பியை பிடித்தவாறு மேலேறிச் செல்ல முடியும். மேலே இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக 4 திருகரங்களுடன் காட்சி தருகிறார் இந்திர தேவன், அவர் அருகிலேயே சிவன், பார்வதி, அகத்தியர் உள்ளிட்டோரையும் ,லிங்கமூர்த்தி ஒன்றையும், நம்மால் தரிசிக்க முடியும்.

நின்றகோரத்தில் அருளும் இந்திர தேவனின் 4 கரங்களில் 2 அஞ்சலி ஹஸ்தமாகத்திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால் சுசீந்திரம் அருள்மிகு தாணுமால சுவாமி திருக்கோவிலின் கோபுரம் தெரிகிறது, இந்திரன் தாணுமாலய சுவாமியை வணங்குவதாக ஒரு ஐதீகமிருக்கிறது.

Exit mobile version