மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!

0
162

 

மூக்கை பயன்படுத்தி டயர்களுக்கு காற்று நிரப்பி சாதனை! கின்னஸ் ரெக்கார்டு படைத்த சேலத்து வாலிபர்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் மூன்று டியூபுகளில் காற்று நிரப்பி தனது சாதனையை அறங்கேற்றினார்.

 

நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்டார். அவர் செய்த சாதனையை வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அவருக்கு அளித்து பாராட்டியுள்ளது. ஏற்கனவே தொடர் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் இந்த சாதனை எளிதாக இருந்ததாகவும், மற்றவர்கள் முறையான பயிற்சி இல்லாமல் முயற்சித்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் நடராஜ் எச்சரித்தார்.ஏற்கனவே யோகாதினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் காலங்களில் ஆரோக்கியமான முறையில் வாழ மூச்சு பயிற்சி அவசியம்.எனவே அனைத்து மக்களும் மூச்சு பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கூறினார் நடராஜ் .இவர் செய்த சாதனையை அங்கு கூடியிருந்த போது மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து பாராட்டி வருகின்றனர்.