இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

0
288
Influenza virus infection! The guidelines published by the Tamil Nadu government!

இன்புளூயன்சா வைரஸ் தொற்று! தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணைவகையான  இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது.

இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் தற்போது வரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ப்ளூ செல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்து எடுக்க வேண்டும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் லேசான காய்ச்சல், இரும்பல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை, தீவிர காச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை, தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள் கர்ப்பிணிகள் 65 வயதிற்கு மேற்பட்டோர் இணை  நோய் இருப்போர் என இரண்டு வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கனா பரிசோதனையோ மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை.

இவர்கள் வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளலாம். சி  வகை பாதிப்புக்கான தீவிர காய்ச்சல் தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, இரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கனா ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல் உணவு உண்ணாமை மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். வீட்டு தனிமையில்  இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள் ஆலோசனை மருத்துவம் பெற வேண்டும். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிவோர் ஆய்வகங்களில் பணிபுரிவோர் கட்டாயம் என் 95 முக கவசம் அணிய வேண்டும்

மற்றவர்கள் மூன்று அடுக்கு முககவசம்  அணிந்திருக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காச்சல் தடுப்பூசி தெளித்துக் கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி  60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முழு தடுப்பூசி செலுத்தி கொள்வது நன்மை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.