Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் சீசன் 7 பற்றிய தகவல் ! அடடே இவங்க எல்லாரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா??

Information about Bigg Boss Season 7! Are all these Bigg Boss season 7 contestants??

Information about Bigg Boss Season 7! Are all these Bigg Boss season 7 contestants??

பிக்பாஸ் சீசன் 7 பற்றிய தகவல் ! அடடே இவங்க எல்லாரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா??
இந்த வருடம் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகர் ஆரவ் அவர்கள்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பட்டத்தை வென்றார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா அவர்களும், மூன்றாவது  சீசனில் நடிகர் முகேன் ராவ் அவர்களும், நான்காவது சீசனில் நடிகர் ஆரி அர்ஜூனன் அவர்களும், ஐந்தாவது சீசனில் விஜய் டிவி ராஜூ அவர்களும் பட்டத்தை வென்றனர்.
இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நடந்து முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டைகளும் பிரச்சனைகளும் அதிகமாக இருந்தது. அதற்கு காரணமாக போட்டியாளர் அசீம் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. போட்டியாளர் அசீம் அவர்களை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தது. இதற்கு மத்தியில் போட்டியாளர் அசீம் அவர்களை மக்கள் ஆதரவு தந்து அவரை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இறுதிப் போட்டியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பட்டத்தையும் அசீம் வென்றார்.
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஆடிசன் சென்னையில்உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.  மேலும் பிரபல நடிகை உமா ரியாஸ் கான், பிரபல தொகுப்பாளினி பாவனா, விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், கலக்கப்போவது யாரு சரத் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகை உமா ரியாஸ் கான் அவர்கள் ஏற்கனவே விஜய் டிவியில் நடைபெற்ற குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரது மகன் சாரிக் கான் அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்பொழுது நடிகை உமா ரியாஸ் கான் அவர்கள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறார்.
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், தொகுப்பாளினி பாவனா, கேபிஒய் சரத், நடிகை உமா ரியாஸ் கான் இவர்களுடன் சேர்ந்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்களும் நடிகை ரேகா நாயர் அவர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பற்றிய அறிவிப்புக்கள் கூடிய விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
Exit mobile version