சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் இயற்பெயர் சிவாஜி ராவ் ஆகும். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நாங்கள் போக்கு பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார்.
அதன்பின் தன்னுடைய 73 ஆண்டுகளில் வெற்றிகரமான நடிப்பின் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற பதவியினை தன்னகத்தே கொண்டவர். 80 முதல் தற்பொழுது உள்ள 2k வரை இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளனர். இப்படி இருக்க கூடிய நடிகர் சூப்பர் ஸ்டார் அவர்களின் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து தற்பொழுது இணையத்தில் சில தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
ரஜினிகாந்த் திருமணத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் :-
ரஜினி, லதா என்ற நடிகையை காதலித்தார். இது எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை என்பதால், அது மிகப்பெரிய பிரச்சனையாகி, அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு பிரச்சனை வந்தது. இதையடுத்து, கோயபுத்தூரில் ஒரு ஓட்டலில் கடுமையாக ரஜினி தாக்கப்பட்டார். இதில், நான் உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு ரஜினி வந்துவிட்டார்.
அந்த சூழ்நிலையில், லதா ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வந்தார். லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்யவேண்டி இருந்தது. அதற்காக ஒரு படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டாரை முதல் முதலில் சந்தித்தார். அப்போது தான் ரஜினிக்கு லதா மீது ஒரு அபிப்ராயம் வந்துள்ளது.
அவர் ஒய்ஜி மகேந்திரனின் மைத்துனி இதையடுத்துத்தான் இருவரின் திருமணமும் நடைபெற்றது. அந்த திருமணத்தையும் யாருக்கும் சொல்லாமல் மிகவும் எளிமையாக ரகசியமாக திருப்பதியில் நடத்தினார். இவர்களின் திருமண விஷயம் தினத்தந்தி பத்திரிக்கையில் மட்டும் தான் செய்தியாக வந்தது என காந்தராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.