Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!

Information for foreign tourists! Tax hike on fees!

Information for foreign tourists! Tax hike on fees!

வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!

பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஐந்து சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.மேலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அந்த தொகையை வசூல் செய்து அரசினால் செலுத்தி வந்தது.

இந்நிலையில் டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரூ 7 லட்சத்திற்கும் அதிகமான தொகை மீதான டிசிஎஸ் வரியும் 20 சதவீதமாக உயர்தப்பட்டுள்ளது.இந்த புதிய வரி விகித மாற்றம் வரும்  ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் டிசிஎஸ் ஆக செலுத்தப்பட்ட தொகையானது திரும்பி வழங்கப்படும் இருப்பினும் வரி விகித உயர்வு காரணமாக ஆரம்பகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் செலுத்த வேண்டிய தொகையானது அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version