TVK VSK: விசிக தலைவர் திருமாவளவன் “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதது குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது.
விசிக தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா “எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார்” என்ற நிகழ்ச்சியை வரும் 6 ஆம் தேதி நடத்த உள்ளார். இதில் முக்கிய நபராக நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அம்பேத்கர் புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சத்குரு பெற உள்ளார். இந்த நிகழ்ச்சியை விசிக பொதுச்செயலாளர் நடத்துவதால் கட்டாயம் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
செய்திகளும் அதன் வண்ணமே வந்தது. ஆனால் திருமாவளவன் மற்றும் விஜய் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்ற காரணத்தினாலே தற்பொழுது இதனை தவிர்த்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வது கூட்டணி கட்சியான திமுகவிற்கும் துளி கூட விருப்பமில்லை. இவ்வாறு இருக்கையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து கேள்விகளை எழுப்பியது.
திருமாவளவனை ஒரு வித பட்டியலின தலைவராக காட்சியளிக்கும் விதத்தை வைத்திருக்கிறார்கள். மேலும் அம்பேத்கர் என்பவர் மகாத்மாவை போல் ஓர் பொதுவான தலைவர். அவர் குறித்த நூல் வெளியிடுவது என்பது மிகவும் பெருமையான ஒன்று. இந்த நிகழ்ச்சியை திருமாவளவன் தவிர்க்கிறார் என்றால் அம்பேத்கருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?? என்ன என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே போல அம்பேத்கரை போற்றும் குழுவினரும் தனது கூட்டணி கட்சிக்காக தங்களது கட்சி கொள்கை தலைவர் என கூறும் அம்பேத்கரை ஒதுக்குவதா எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர். இது குறித்து கட்டாயம் திருமாவளவன் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.