சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது.அப்போது தமிழகம், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை தொடரும்.ஒரு சில நேரங்களில் ஜனவரி மாதம் முதல் வாராம் வரையிலும் நீட்டிக்கும்.
அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கியது.தற்போது ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது வரை குறைந்த அளவில் மழை பதிவாகியுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடங்கியதில் இருந்து நேற்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி 44.1 செ.மீ மழை பெய்து இருக்க வேண்டும் ஆனால் சற்று அதிகமாக 44.5 செ.மீ பெய்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.