சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!
கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.மேலும் அவை புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.
அதன் காரணமக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் அந்த புயலினால் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் சேதம் அடைந்தது.புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து.ஆனால் அது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.நீலகிரி மாவட்டத்தில் மலை பகுதியில் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் உரை பணிக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளனர்.மேலும் வரும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.