சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும் கனமழை!
கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில்.தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.மேலும் திருவண்ணாமலை ,சேலம் ,ராமநாதபுரம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு,ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கிருஷ்ணகிரி ,தருமபுரி ,திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.