சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் இருந்து தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.
மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது, அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தின் முதலில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள்.
சேதமடைந்த பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.