அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்!
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிஅரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் எந்தவித கோரிக்கையும் ஒன்றிய அரசு ஏற்காததால் தொடர்ந்து நீட் தேர்வு நடந்து வருகிறது.தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில்,இனியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்று எண்ணி தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை கூடுதலாக 850 பேருக்கு இடங்களை கொடுத்துள்ளது.தற்போது தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 18 மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்வதற்கு ஒன்றிய அரசு இடங்களை கொடுத்துள்ளது. மேலும் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம் என்றும் கூறினார். மேலும் திண்டுக்கல் ,கிருஷ்ணகிரி ,நாமக்கல், அரியலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் கட்டிட பணிகள் நிறைவு பெறவில்லை என்பதால் அந்த கல்லூரிகளை மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.அந்த கட்டிட பணிகள் வரும் பத்து நாட்களில் முடிந்துவிடும்.
அவ்வாறு முடிந்த உடன் அந்த மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.மேலும் விருதுநகர் ,கள்ளக்குறிச்சி ,உதகை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 250 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார்.அத்தோடு திருப்பூர் ,ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 100 மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது என்று கூறினார்.
ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். அதேபோல பட்ஜெட் தாக்குதலில் கூறியிருந்த 110 அறிவிப்புகள் ஒன்றுதான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்.இந்தத் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க உள்ளதாக கூறினார்.இந்த திட்டமானது பொது மருத்துவர் ,அறுவை சிகிச்சை ,குடல் நோய் என 16 சிறப்பு துறைகளுடன், 21 மாநகராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 1240 முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.