Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்!

Information released by Southern Railway! Train service change in this area today!

Information released by Southern Railway! Train service change in this area today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது.

அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டது.குறிப்பாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்யப்பட்டதினால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினார்கள்.அதனையடுத்து தீபத்திருநாள்,கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்த ஆண்டு இம்மாதம் கடந்த 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் நிலை இருந்தது அதனால் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டது.இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று மற்றும் 28 ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் மறுநாள் காலை 6.40 மணிக்கு கேரளத்தின் குருவாயூர் சென்றடையும்.மேலும் கேரளத்தின் சாலக்குடி மற்றும் குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து இன்று மற்றும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி சென்னை எழும்பூர் முதல் சாலக்குடி வரை மட்டுமே விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version