வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கானகான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
01.01.2025 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29-10-2024 முதல் 06-01-2025 வரை முடிவு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்த முகாமில் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கும், பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் 09-11-2024, 10-11-2024 & 23-11-2024 , 24-11-2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) போன்ற தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.
இந்த சூழ்நிலையில் 09-11-2024 அன்று தமிழக அரசால் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் தேதிகளை 09-11-2024, 10-11-2024 பதிலாக 16-11-2024, 17-11-2024 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றியமைத்து தற்போது தகவல் வெளியிடப் பட்டு உள்ளது.மேலும் வாக்காளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.