Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. எனவே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க விட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை அளித்துள்ளது.

Exit mobile version