தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் காணொளி வாயிலாக தங்கள் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் குறைந்த கால அளவே உள்ளதால் அதற்கான பணிகளை தொய்வின்றி மேற்கொண்டால் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் எனவே தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய எல்.முருகன் அடுத்த வருடம் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பை அறிவித்தார்.இந்த அறிவிப்பு அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கிடையே ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக,அதிமுக போன்ற கட்சிகள் சிறப்பாக செயல்படும் தங்கள் கட்சியின் நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாக மோதிரம் போன்றவைகளை பரிசாக வழங்குவார்கள். இந்நிலையில் பாஜக தலைவரின் இந்த அறிவிப்பு மற்ற கட்சிகளின் தலைமை மற்றும் நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது எல்.முருகன் தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் மேலும்,பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்றும்,
எம்.ஜி.ஆர் போன்று மக்களை ஈர்க்கும் சக்தியும், ஆற்றலும் பிரதமர் மோடிக்கு உள்ளது.தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்று கூறினார்.