Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்பெக்டர் செய்த அசிங்கம்! தட்டி கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த உத்தரவை மீறி காரணமின்றி பொழுதுபோக்க வருபவர்களை மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வது அல்லது அபராதம் விதிப்பது என்று காவல்துறை நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த இளைஞர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் அப்பகுதியின் காவல் ஆய்வாளர் சுதாகர் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலித்து வந்ததாக கூறியிருந்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாகவும், தர மறுப்பவர்கள் மீது வழக்குப்பதிந்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பாவி மக்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களிடம் 10,000 ரூபாய் கேட்பதாகவும். பணம் கிடைத்தவுடன் அவர்களை விரட்டியடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால் அப்பகுதி ஆய்வாளரை 10,000 ரூபாய் காவல் அதிகாரி என்றும், கிரிமினல் ஆட்களுடன் தொடர்பில் இருப்பதால் ஜில்லா என்றும் அழைக்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது. அதோடு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி அனைத்து கட்சியின் சார்பாக இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை பார்த்து ஆத்திரமுற்ற சின்னசேலம் பகுதி காவல் ஆய்வாளர் சுதாகர் அவரை அவரது வீட்டிலேயே விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் அடித்ததாக தெரிகிறது. அடி தாங்காமல் கூச்சலிட்ட சக்திவேலின் குரலை கேட்டு அங்கு வந்த ஊர்க்காரர்கள் காவல் ஆய்வாளரை தடுத்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி ஆய்வாளர் சுதாகர் சக்திவேலை வண்டியில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞரை புகார் இன்றி அடித்து துன்புறுத்தியதாக அவரின் பெற்றோர்களும், அந்த ஊர் மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பொது மக்களை காக்க காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் வேலையில், இது போன்ற ஆய்வாளரின் செயலால் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version