Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போதைய இளைஞர்களை கவரும் விதமாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை இது சரிபடுத்தி இருக்கின்றது.

இதனையடுத்து மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்டரை அறிந்துகொள்ள மற்றும் மொழிமாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தாலும் அதன் மேலிருந்த இடதுபுறத்தில் மொழி மாற்றத்திற்கான வசதிகள் இருக்கும். அதனை கிளிக் செய்வதன் மூலமாக அவர்களின் பதிவை நமது சொந்த மொழியிலேயே தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் உலகம் முழுவதும் இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சர்வதேச நண்பர்களை எளிதாக அணுக 90 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்திருக்கின்றது.

இதனை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு கேப்ஷன், கமெண்ட் மற்றும் பயனர்களின் அறிமுகம் ஆகியவற்றிற்கு மொழிபெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பதிவுகளுக்கு மொழிபெயர்ப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. மேலும், ஆடியோ மொழிபெயர்ப்பு வசதி உருவாக்கப்படவில்லை எனவும் இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் பதிவுகளையும், ரீல்ஸ்களையும் இணைக்க சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் கூறியிருக்கின்றது.

Exit mobile version