நாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்! மத்திய நிதியமைச்சர்!

0
142

மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்ற திட்டங்கள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சிறு, குறு, தொழில்களுக்கான அவசர கடனுதவி திட்டம் மார்ச் மாதம் 2023 ஆம் வருடம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் நாடு முழுவதும் ரசாயனமில்லாத விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும், நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். ஒன் ஸ்டேஷன், ஒன் புராடக்ட் திட்டம், உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோகப் பாதையை மேம்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.