Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிக்காமல் வரும் இருமலுக்கு உடனடி தீர்வு!

#image_title

நிக்காமல் வரும் இருமலுக்கு உடனடி தீர்வு!

குளிர்காலத்தில் வறட்டு இருமல் பாதிப்பு அதிகளவில் இருக்கும். இந்த வறட்டு இருமல் பாதிப்பை எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி சரி செய்து விடலாம்.

இருமலை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்…

தேவைப்படும் பொருட்கள்:-

*மிளகு
*சீரகம்
*கட்டி பெருங்காயம்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 4 அல்லது 5 மிளகை இடித்து சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் கட்டி பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு இதை வடிகட்டி பருகவும். இந்த பானத்தை காலை, இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

இருமலை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்…

தேவைப்படும் பொருட்கள்:-

*கற்பூரவல்லி இலை
*மஞ்சள்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 அல்லது 4 கற்பூரவல்லி இலையை போட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும்.

பின்னர் அதை ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாற்றில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரவும்.

இருமலை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்…

தேவைப்படும் பொருட்கள்:-

*வால்மிளகு
*இஞ்சி
*தேன்
*சித்தரத்தை பொடி
*கரிசலாங்கண்ணி பேஸ்ட்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் இடித்த வால்மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் அதில் 1/2 ஸ்பூன் சித்தரத்தை பொடி, 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். அடுத்து ஒரு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பேஸ்ட் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரவும்.

Exit mobile version