மூக்கு ஒழுகல் இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! இப்போவே முயற்சி பண்ணுங்க!

0
143
Instant solution to runny nose cough problem!! Try it now!

பருவ காலங்களில் சளி,இருமல் பாதிப்பை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சந்திக்கின்றனர்.இந்த சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்பு ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றாலும் சிலருக்கு இது கடுமையான தொந்தரவுகளை தந்துவிடும்.

எனவே சளி,இருமல்,தொண்டை கரகரப்பு,காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள கீழ்கண்ட கை வைத்தியத்தை செய்யவும்.

*கரு மிளகு – ஒரு தேக்கரண்டி
*தேன் – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.பிறகு அதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த கரு மிளகு பொடியை கிண்ணத்தில் கொட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சளி,இருமலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

*பூண்டு பல் – நான்கு
*நெய் – ஒரு தேக்கரண்டி
*வெந்நீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் நான்கு வெள்ளைப் பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.

பிறகு ஒரு கிளாஸ் அளவு நீரை சூடாக்கி வதக்கிய பூண்டு பற்களை சேர்த்து சாப்பிட்டால் சளி,இருமல் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

*இஞ்சி – ஒரு துண்டு
*தேன் – ஒரு தேக்கரண்டி
*பால் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து பாலில் சேர்க்கவும்.பால் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

*மஞ்சள் – அரை தேக்கரண்டி
*பால் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

*சுக்கு – ஒரு துண்டு
*தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நீங்கும்.